‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தில் உள்ள 10 கதாபாத்திரங்களை குறிக்கும் வகையில் புதிய போஸ்டர்களை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களில் சூப்பர் ஹீரோக்களுக்கு என உலகெங்கிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. டிஸ்னி மார்வல் நிறுவனம் சூப்பர் ஹீரோக்கள் என ஒரு கூட்டத்தையே அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள சூப்பர் ஹீரோ தான் ‘கேப்டன் மார்வல்’.
இந்தப்படத்தில் கேப்டன் மார்வலாக ப்ரை லார்சன் நடித்துள்ளார். படத்தில் சாமுவேல் ஜான்சன், பென் மெண்டல்ஷான், லஸ்கனா லின்ஞ், கெம்மா ஜான், அல்ஜினிஸ் பெர்ஸ், ரூன், ஜூட் லா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், இரண்டாம் ட்ரெய்லர் டிசம்பர் மாதமும் வெளியானது. ரசிகர்களிடையே ட்ரெய்லர்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் மார்ச் 8ம் தேதி திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 days. Check out these brand new character posters, and see Marvel Studios' #CaptainMarvel in theaters March 8th! Get tickets now: https://t.co/2jpqCtqO4G (3/3) pic.twitter.com/hkYBFLhQgP — Captain Marvel (@captainmarvel) January 16, 2019
இந்நிலையில்‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்திலுள்ள 10 கதாபாத்திரங்களை குறிக்கும் வகையில் புதிய போஸ்டர்களை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர்களை வெளியிட்டுள்ள மார்வல் படக்குழு, 50 நாட்களில் மார்வலின் புதிய கதாபாத்திரங்களை காணுங்கள். மார்ச் 8 தேதி மார்வலை திரையரங்குகளில் காணலாம் என்று தெரிவித்துள்ளது.
புதிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை மார்வெல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!