பாஜகவைக் சுமந்து கொண்டு தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுக என்ன பாவம் செய்தது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளைக் முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு விவாகரம் புணையப்பட்ட ஒரு நாடகம். இதில் எந்த உண்மையுமில்லை, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் நாடகமாடி கொண்டிருப்பதாகவும் அதிமுகவின் வெற்றியைக் சீர்குலைப்பதற்காக இந்த நாடகத்தைக் திமுகவும்,காங்கிரஸூம் நிகழ்த்தி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், முதலில் குட்கா விவாகரத்தில் சிபிஐ விசாரணை கேட்டார்கள். தற்போது இந்த விவகாரத்தைக் நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பதாக செய்தி வந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாரும் ராகுலைக் பிரதமராக முன் நிறுத்தபோவதில்லை. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்றால் அதில் என்ன சூட்சபம் இருகிறது என்று கேள்வி எழுப்பினார். திமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அதில் அங்கம் வைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செயல்பட்டு கொண்டு இருப்பதாக தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுடன் சில நட்போடுதான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் கொண்டு வரும் எல்லாவற்றையும் நாங்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்தார். அதிமுக கொள்கை உடைய கட்சி, பாஜகவைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும் பாஜகவைக் சுமத்து கொண்டு காலூன்ற வைக்க, அதிமுக என்ன பாவமா செய்தது? பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல் வரும் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்.அதிமுக கட்சியைக் மேலும் மேலும் வளர்க்க நாங்கள் பாடுபடுவோமே தவிர, இன்னொரு கட்சியை வளர்க்க நாங்கள் பாடுபட மாட்டோம் என தம்பிதுரை கூறியுள்ளார்.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்