விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி, அருண்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்
லுக் வெளியாகியுள்ளது

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ‘பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி'யும் முக்கியமானவை.
பண்ணையாரும் பத்மினியும் கிராமத்து பின்னணியில் உருவான திரைப்படம். ’சேதுபதி’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான
போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார். இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் அருண்குமார். இரு படங்களின் வெற்றிகளுக்கு
பிறகு அருண்குமார் வேறு படங்களை இயக்கவில்லை. அடுத்தப்படம் குறித்த கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்ட
நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியுடனே அவர் இணைந்தார்.  

ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி, அருண்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட்
லுக் வெளியாகியுள்ளது.

அந்த திரைப்படத்துக்கு சிந்துபாத் என்ற பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் முகத்தில்
ரத்தக்காயத்துடன் விஜய் சேதுபதி நிற்பது போலவும், பின்னால் ஒரு கூட்டம் துரத்துவது போலவும் அமைந்துள்ளது. இந்த
திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா மற்றும் தென் தமிழகத்தின் பல இடங்களிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com