நிலாவுக்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் உள்ள பருத்தி விதைகள் முளைக்க தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பருத்தி விதைகள் முளைக்கும் புகைப்படத்தையும் சீனா பகிர்ந்துள்ளது.
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய சேஞ்ச் 4 விண்கலம் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தாதுக்கள் மற்றும் கனிமங்கள் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷமாக நிலவு இருப்பதால், அதன் மறுபக்கத்தை ஆய்வு செய்வது இன்றைய தேவையாக உள்ளதாக சீனா தெரிவித்தது. இந்த ஆய்வில் நிலவில் உள்ள கனிமங்கள், கதிர்வீச்சின் அளவு, உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் எந்த அளவில் உள்ளன உள்ளிட்ட பல முக்கிய ஆராய்ச்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆராய ஏதுவாக விண்கலத்தோடு சேர்த்து உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள், அராபிடாப்சிஸ் தாவர விதை மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. நிலவில் உள்ள தட்பவெப்பமும், சூழ்நிலையும் ஏதுவாக இருந்தால் தாவர விதைகள் முளைக்க வாய்ப்புள்ளதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதன்படி விண்கலத்தோடு சேர்த்து அனுப்பப்பட்ட பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பருத்தி விதை முளைக்கும் புகைப்படங்களையும் விண்கலம் அனுப்பியுள்ளது. இது நல்ல முன்னேற்றம் என்றும், நிலவில் தாவரங்கள் வளர்ந்தால் அது மற்ற உயிரினங்கள் வாழவும் வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!