Published : 16,Jan 2019 07:36 AM

கென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி

Terrorist-attack-in-Kenya-Hotel--15-dead

கென்யாவில் ஆடம்பர ஹோட்டலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி 15 பேரை கொன்றுள்ளனர்.

கென்ய தலைநகர் நைரோபியில் ஆடம்பர ஹோட்டல் ஒன்று உள்ளது. 101 அறைகளுடன் கூடிய இந்த ஹோட்டலில் நீச்சல் குளம், ரெஸ்ட்டாரண்ட், அலுவலக கட்டிடம் என சகல வசதிகளும் உள்ளன. இங்கு துப்பாக்கியுடன் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இந்தத் தாக்குதலில் இதுவரை 15 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதேசமயம் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக தீவிரவாதிகள் நுழைந்த பின்னர் கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஹோட்டலுக்குள் மக்கள் உயிர் பயத்துடன் இருந்துள்ளனர். பின்னர் சிலரை தீவிரவாதிகளே விடுவித்தாகவும் கூறப்படுகிறது. முழுமையான போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் இன்னும் ஹோட்டல் கொண்டுவரப்படவில்லை. இன்னும் இரண்டு மூன்று தீவிரவாதிகள் உள்ளே இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் பொதுமக்கள் சிலரும் ஹோட்டலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அல்- ஷபாப் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்