தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்
தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உறுதிமொழியுடன் தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.  அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 636 காளைகளுடன் 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். காலை 8 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன வண்ணம் உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர்  நடராஜன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் ஆட்சியர்  முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு, காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்‌பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் 75 மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை களத்திலுள்ள வீரர்கள் காளையின் கொம்பையோ , வாலையோ புடிக்க கூடாது என்பது விதி. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் காளைகளை பிடிக்கக் கூடாது.  வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1095 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com