பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த அகஸ்தியர் மலைக்கு முதல்முறையாக பெண் ஒருவர் சென்றுள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெய்யாறு வனச்சரணாலயத்தில் அமைந்துள்ள அகஸ்தியர்கூடத்தில், அகஸ்திய முனிவர் தங்கி இருந்ததாக அங்குள்ள பழங்குடியினர் நம்புகின்றனர். அகஸ்திய முனிவருக்குத் தனியாக கோயில் இருந்தாலும் இங்கு வழிபாடு செய்வதற்கு பெண்களுக்கு அனுமதியில்லை. பாலின பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியதையடுத்து பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் தன்யா சனல் என்பவர் முதல்முறையாக அகஸ்தியர் மலைக்கு சென்றார். முன்னதாக, சபரிமலையில் பெண்கள் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் உத்தரபிறப்பித்தது. இதையடுத்து சபரிமலைக்கு பெண்கள் செல்ல முயல்வதும், அதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்துவதும் எனத் தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே இரண்டு பெண்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியாகின. இந்நிலையில் இன்று சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide