இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.
இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய ஜிவி பிரகாஷ் பிறகு திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார். தற்போது பல படங்களில் நடித்து வரும் அவர், இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை தனசேகரன் இயக்க உள்ளார்.
பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்துக்கு ‘96’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷின் ஜோடி இல்லை என்றும், சகோதரியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்படவில்லை.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர் பல படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி