
மக்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை உலக தரத்தில் முன்னேற்ற பாடுபட்டவர் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிலிப் கோட்லர் விருது வழங்கப்பட்டது.
அமெரிக்க பொருளாதார எழுத்தாளரான பிலிப் கோட்லரின் பெயரில் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் மேம்பாடு, பொருளாதாரம், சமூகம் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்துக்காக உலக அளவில் இந்தியாவை முன்னேற்றியவர் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிலிப் கோட்லர் விருது வழங்கப்பட்டுள்ளது. புதிய டெல்லியில் இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அன்றாடம் நிர்ணயம் செய்யும் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.