[X] Close

கோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல் 

Traffic-cops-fined-half-of-Goa---s-14-59-lakh-population-in-2018

சுற்றுலாத்தலமான கோவாவில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 7.74 லட்சம் பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இந்தியாவின் சுற்றுலாப் பகுதிகளில் முக்கியமான இடம் கோவா. மலைகள், அரபிக்கடல், கோட்டைகள் என கோவா சிறந்த சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக அப்பகுதியில் ஏராளமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்நிலையில் கோவாவில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 7.74 லட்சம் பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, கோவாவில் உள்ள மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பலரும் வந்து செல்லும் சுற்றுலாத்தளங்களில் மக்கள் சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.  உள்ளூர் வாசியாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணியாக இருந்தாலும் சரி, சாலை விதிகளை மீறும் யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். இந்த ஆண்டு மட்டும் 7,74,578 பேரிடம் ரூ.9.19 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 48% அதிகம். 

அதே வேளை வெளியூர் பதிவெண் கொண்ட வாகனங்களை குறி வைத்து சில காவலர்கள் வேண்டுமென்றே அபராதம் விதிப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கடந்த ஆண்டு கோவாவிற்கு 70 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close