[X] Close

இந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்!

Will-wink-girl-Priya-Varrier-be-seen-in-Takht-with-Ranveer-Singh-

புருவ அசைவு மூலம் பலரை கவனிக்க வைத்த மலையாள நடிகை பிரியா வாரியர், இந்தியில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

பிரியா வாரியர் நடித்த மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப் படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல் காட்சிகள் வைரலானது. விரல்களில் முத்தமிடும் காட்சிகளும் அதிகம் வைரலானது. அந்த நேரத்தில் பிரியா வாரியர் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக இருந்தார். அதோடு, பாடல் மற்றும் அதில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றம் வரை சென்றது. அதனால், பிரியா வாரியர் நீண்ட நாள் பேசு பொருளாக இருந்தார்.


Advertisement

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நான்காவது நபராக பிரியா வாரியர் இருந்துள்ளார். இவரை இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர், தனது ’தக்த்’ படத்தில் நடிக்க வைக்கிறார். இதில் ரன்வீர் சிங், விக்கி கவுசல், கரீனா கபூர் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரியா வாரியரும் நடிக்கிறார் எனத் தெரிகிறது. இந்நிலையில் இந்தி ஹீரோக்கள் ரன்வீர் சிங் மற்றும் விக்கி கவுசலுடன் புகைப்படங்கள் எடுத்து டிவிட்ட ரில் வெளியிட்டுள்ளார் பிரியா. 

உரியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து, ’உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற இந்திப் படம் சமீபத்தில் வெளியாகியு ள்ளது. இதில் விக்கி கவுசல், பரேஷ் ராவல், யாமி கவுதம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பிரிமீயர் ஷோ மும்பையில் நடந்தது. இதற்கு பிரியா வாரியரும் அழைக்கப்பட்டிருந்தார்.


Advertisement

அப்போது, அவர் ரன்வீர் சிங், விக்கி கவுசலுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. சில ரசிகர்கள், அவர் இந்தியில் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close