பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நாட்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நாட்டில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் பொதுமக்கள், வணிகம் என அனைத்து தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது தெரியவந்துள்ளது. அதாவது 2013-14 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 3.4 சதவீதமாக இருந்த நிலையில், அதுவே 2015-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016-2017-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 3.9 சதவீதமாக அதிகரித்ததும் தெரியவந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் வேலை செய்ய தயாராக இருந்ததும் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய தொழிலாளர் பணியக அறிக்கை மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்