மேகாலயா சுரங்கத்தில் இருந்து 28 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றியும் மீட்பு பணியில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது.
மேகாலயாவில் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. கைவிடப்பட்ட சில சட்ட விரோத சுரங்கங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள சான் கிராமத்தில், கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. ’எலி வளை’ சுரங்கம் என்ற சொல்லப்படுகிற இந்தச் சிறிய சுரங்கத் துக்குள் மழை காரணமாக, அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந் த மாதம் 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர், அதற்குள் சிக்கினர். அதில் 2 பேர் வெளியேறிவிட்டனர். 13 பேர் மாட்டிக்கொண்டனர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை, கடற்படை வீரர்கள் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ம்தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். ஒரு மாதம் ஆகியும் அவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகிறது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோல் இண்டியா, கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த பம்புகளை வழங்கியுள்ளன.
கடந்த புதன்கிழமை மாலை வரை, 28 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இருந்தாலும் சுரங்கத்துக்குள் தண்ணீர் அளவு குறைய வில்லை.
இதுபற்றி இந்த மீட்புக் குழுவின் செய்தி தொடர்பாளர் ஆர்.சுசுங்கி கூறும்போது, ‘’கடற்படையினர் தண்ணீருக்குள் மூழ்கி, ஆறு சுரங்கத்துக்குள் தேடுதலை நடத்தினர். அதில் முன்னேற்றமில்லை. தொடர்ந்து முயன்று வருகிறோம்’’ என்றார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!