[X] Close

ஐ எஸ் குகைக்குள், வெடிகுண்டுகளின் அம்மா!

mother-of-all-bombs-in-afghanistan

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் குகைகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்கு பயன்படுத்தப்பட்ட வெடி குண்டுகள், அனைத்து வகையான வெடிகுண்டுகளின் அம்மா எனக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடத்தை குறிவைத்து அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்கப் படைகள் நடத்திய பிரமாண்ட தாக்குதலைப் பாராட்டுவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா வீசிய GBJ - 43 ரக வெடிகுண்டு, அனைத்து வகையான வெடிகுண்டுகளின் அம்மா (MOTHER OF ALL BOMBS) எனக் கருதப்படுகிறது. இது அணுகுண்டு அல்லாத, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பெரிய வெடிகுண்டாகும். அமெரிக்க விமானப் படையின் ஆராய்ச்சிக் கூடத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எல், வெய்மார்ட்ஸ் என்பவர் இதனை உருவாக்கினார். இது 21 ஆயிரத்து 600 பவுண்டு, அதாவது 9 ஆயிரத்து 797 கிலோ எடை கொண்டதாகும்.


Advertisement

இந்த வெடிகுண்டு முதன் முறையாக கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ‌எக்லின் விமானப் படைத்தளத்தில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அந்த வெடிகுண்டு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு ஈராக் போரில் அமெரிக்கா‌வால் பெருமளவில் பயன்படுத்தப்‌பட்டது. சதாம் உசேனை பிடிப்பதற்காக ஈராக்கிற்குள் நுழைந்த போது அந்நா‌ட்டுப் படையினரை மன ரீதியாக அச்சுறுத்தி பணியவைப்பதற்காக இந்த பிரமாண்ட வெடிகுண்டை அமெரிக்கா அதிகம் பயன்படுத்தியது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close