Published : 10,Jan 2019 03:39 PM

சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘விஸ்வாசம்’

Actor-Ajith---s-Viswasam-illegally-leaked-in-online-by-Tamilrockers

பொங்கல் பண்டிகை விருந்தாக ‘விஸ்வாசம்’,‘பேட்ட’ திரைப்படங்கள் இன்று அதிகாலை திரையரங்குகளில் முன்கூட்டியே  வெளியானது. இந்தப் படங்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 3 மணி காட்சி ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.

Image result for விஸ்வாசம்

ஒரே தியேட்டரின் இரண்டு ஸ்க்ரீன்களிலும் ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ படங்கள் ரிலீஸ் ஆனதால், ஒவ்வொரு திரையரங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் இரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது. இதன் பின்பு 3 மணியளவில் ரஜினிகாந்தின் "பேட்ட" படம் திரையிடப்பட்டது. 

Image result for விஸ்வாசம்

பக்கா கிராமத்து கமர்சியல் படமாக ‘விஸ்வாசம்’ உருவாகியுள்ளதாக சிறப்புக் காட்சியை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்  அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ‘விஸ்வாசம்’ படம் உருவாகியுள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறுகினர். குறிப்பாக நயன்தாரா நடிப்பு, டி.இமானின் பின்னணி இசை என ‘விஸ்வாசம்’ படத்துக்கு பலம் சேர்த்து இருப்பதாக ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் ‘விஸ்வாசம்’  படம் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்