“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்

“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்
“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அதிமுக அரசே தண்டிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கங்களை முன்வைத்து  தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு மர்மமாக உள்ளது. யார் காரணம் என்று இதுவரை தெரியாமல் சர்ச்சையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமாவர்கள் சிறைச் செல்வார்கள்” என்றும் தெரிவித்தார்.

இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா விவகாரத்தில் திமுகவை விட தங்களுக்கு அதிக அக்கறை உள்ளதாகவும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” என்றும் தெரிவித்தார். மேலும் திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு அவர் கூறுனார். 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com