[X] Close

’பேட்ட’ ரிலீஸ்: பொங்கல் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

rajini-fans-celebrate-Petta-in-style-2018

ரஜினியின் ’பேட்ட’ பட ரிலீஸை முன்னிட்டு சோளிங்கரில் ரசிகர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜீத்குமார் 'விஸ்வாசம்' படங்கள் இன்று வெளியாகியுள்ளன.


Advertisement

இதையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள், ரஜினி, அஜீத் கட் அவுட்கள், பேனர்கள், தோரணங்கள் என களைகட்டியது. பல இடங்களில் ஒரே தியேட்டரில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளதால் ஒவ்வொரு திரையரங்கும் விழாக்காலம் பூண்டிருந்தது. 

இந்நிலையில் இந்தப் படங்களின் சிறப்புக் காட்சி தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் இன்று காலை நடந்தது. சில தியேட்டர்களில் அதிகாலை 3 மணிக்கே படம்திரையிடப்பட்டன. தியேட்டர்களில் குவிந்த ரசிகள் முண்டியடித்தனர். பல தியேட்டர்களின் முன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேளதாளங்கள் அடிக்கப்பட்டன.


Advertisement

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள சுமதி திரையரங்கில், அதிகாலை 5.30 மணியிலிருந்து ரசிகர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் பெண்களும் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பழங்களை கொண்டு திருஷ்டி கழித்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் படத்தை வரவேற்று  கொண்டாடினர். 

 


Advertisement

Advertisement
[X] Close