திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுமித்ரா கான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னதாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவை சவுமித்ரா கான் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சவுமித்ரா கான், மேற்கு வங்காளத்தில் தற்போது ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை என்றும் காவல்துறையின் ராஜ்ஜியமே நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். போலீஸ் அதிகாரிகள் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
நரேந்திர மோடியால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புவதாகவும், எனவே பாரதிய ஜனதாவில் இணைவதாகவும் சவுமித்ரா கான் தெரிவித்தார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா அதிக கவனம் செலுத்தும் சில மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று. இம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் 22-ல் வெல்ல பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே சவுமித்ரா கான் தவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 5 எம்.பி.க்களும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியை சேர்ந்த முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!