‘பேட்ட’,‘விஸ்வாசம்’திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வரவுள்ளன. இந்தப் படங்கள் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிஎஸ்என்எல், ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட 37 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் எனவும், 3 ஆயிரத்து 710 சட்டவிரோத இணையதளங்களை முடக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், இதேபோன்று கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் உத்தரவின் அடிப்படையில் ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதிப்பதாக அறிவித்தார்.
சமீப காலங்களாகவே வெளியாகும் புதுப்படங்கள் அன்றைய தினமே சட்டவிரோதமாக இணையதங்களில் வெளியாகி விடுகின்றன. இதனால் படத் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்