[X] Close

தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளரை கைது செய்ய உத்தரவு

Chennai-High-court-Ordered-to-arrested-tn-education-secretary

தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளர் மங்கத் ராம் ஷர்மாவை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளி மாநிலங்களில் தொலைநிலைக் கல்வி மையம் தொடங்க தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் போது, தொலைநிலை கல்வி மையங்கள் இயங்காது என பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிமாநிலங்களில் தொலைநிலை கல்வி மையங்கள் இயங்க கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கடந்தாண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.


Advertisement

இந்த நிலையில் தொலைநிலை கல்வி மையங்கள் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதனையடுத்து தனியார் கல்லூரிகள் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா, பல்கலைக்கழகப் பதிவாளர் வனிதா உள்பட 10 பேர் ஜனவரி ஏழாம் தேதி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மங்கத் ராம் ஷர்மாவைத் தவிர மற்றவர்கள் ஆஜராகினர்.

இதனையடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மாவை கைது செய்து ஆஜர்படுத்த  சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Advertisement

Advertisement
[X] Close