பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படமான ‘பிஎம் நரேந்திர மோடி’ யின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
பாலிவுட்டில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகம் எடுக்கப்படுகின்றன. கற்பனைக்கதையை உருவாக்கி எடுக்கப்படும் திரைப்படங்களை காட்டிலும் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்பையும், முக்கிய பதிவாகவும் அமைகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் சில சர்ச்சைகளை அது சந்தித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் இயக்குநர் ஓமங் குமார் இயக்க உள்ளார். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கியவர் ஓமங் குமார். இதன்படி நரேந்திர மோடியின் திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. காவி நிற ஜிப்பாவை அணிந்தபடி நரேந்திர மோடி நிற்பது போலவும், பின்னால் தேசியக்கொடி பறப்பது போலவும் இந்த பர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மோடியின் உருவத்திற்கு விவேக் ஓபராய் சரியாக பொறுந்தி உள்ளதாக பலரும், இந்த போஸ்டரில் உள்ளவர் மோடி போலவும் இல்லை, விவேக் ஓபராய் போலவும் இல்லை எனவும் பலர் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Loading More post
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?