Published : 06,Jan 2019 07:11 AM

இன்று பாஜகவின் மாநில உயர்மட்டக் குழு

The-Bharatiya-Janata-Party-Meeting-is-to-be-held-Today-in-Chennai

இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. 

பாரதிய ஜனதாவின் உயர்மட்டக் குழுக் கூட்டமானது இன்று மாலை 6 மணிக்கு பாஜக அலுவலகம் கமலாலயத்தில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் திருவாரூர் இடைத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முரளிதரராவ், சந்தோஷ், ராம்நாத் என 3 தேசிய பொது செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். அதேபோல வரும் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

Related image

ஏற்கெனவே திருவாரூர் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் சொல்லியிருந்தார். இந்த நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா அப்படி போட்டியிட்டால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற விவரங்கள் விவாதிக்கப்படுகின்றன, மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா யாருடன் கூட்டணி வைக்க வேண்டுமென்ற தொடர்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கூட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகிகள் இல.கணேசன். ஹச். ராஜா, சிபி ராதாகிருஷ்ணன் கே.என் லட்சுமணன், நாராயணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்