[X] Close

பர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின் டாப் 10 கிராமத்து பாடல்கள்!

A-R-Rahman-s-top-10-Village-songs

ஆஸ்கர் தமிழன், ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று பர்த் டே! வாழ்த்துகளால் குவிந்து நிரம்புகிறது, சமூக வலைத்தளங்கள். 

உணர்வுகளை மீட்டி, உடலை மிதக்க வைக்கும் உன்னத உயிர், இசை! மனம் வலிக்கும் சோகமோ, தலை சிலுப்பும் மகிழ்ச்சியோ, நம்மை இதமாக்கி சுகமாக்கும் தன்மை, பாடல்களுக்கு இருக்கிறது. நீண்ட தூர பயணம், தூங்காத இரவு, தீராத சோகம், திகட்டாத மகிழ்ச்சி அனைத்துக்கும் பாடல்தான், ஆல்ரவுண்ட் நிவாரணி! பல்வேறு உணர்வு நிலைகளுக்கு ஏற்றபடி, ரகுமான் தந்திருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்!


Advertisement

ஒவ்வொரு ராகம்! காதல், சோகம், துள்ளல், கொண்டாட்டம் என விதம் விதமாக வரிசைப்படுத்த ஏராளமாக இருக்கிறது, அவரது பாடல்கள். வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவரது பாடல்களில் டாப் 10 கிராமத்துப் பாடல்கள் இவை. இது முற்றும் முடிவும் அல்ல. இன் னும் சிலவோ, பலவோ இருக்கும். ரசனை, அவரவர்களுக்கு மாறுவதுதானே!. 

1. தென் கிழக்கு சீமையிலே... கிழக்கு சீமையிலே

’’தென் கிழக்கு சீமையில செங்காத்து பூமியில ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு’’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் இசையும் ராதிகா, விஜயகுமாரின் நடிப்பும் காட்சி அமைப்புகளும் இந்தப் பாடலின் உயிர்.


Advertisement

2. மாரி மழை பெய்யாதோ... உழவன்

வழக்கமான கிராமத்து பாடல்களில் இருந்து வித்தியாசமான இசை கொண்ட பாடல் இது. 

3. உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி... ஜென்டில்மேன்

’விடலை பொண்ணு நுனிநாக்கு வெத்தலையாலே சிவந்திருக்கு/ வேப்பமரத்து கிளிமூக்கு வெத்தலைபோட்டா சிவந்திருக்கு’’ வைரமுத்துவின் வார்த்தைகளும் நடன அமைப்பும், இந்தப் பாடலில் அடடா!

4. போறாளே பொன்னுத்தாயி... கருத்தம்மா

தொடக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை அப்படியே அந்தக் கிராமத்துக்குள் அழைத்துச் செல்கிறது. ’’வெள்ளாமை நீதான், வெள்ளாடு நான்தான், வெட்கத்தை விட்டுத்தள்ளுமா’’- என்கிற வார்த்தைகளும் கிராமத்து முடுக்குகளும் கருவைமுட்களும் அந்த வயல்வெளியும்
பாடலுக்கு இன்னும் ஊட்டுகிறது உயிர்.

5. வராக நதிக்கரையோரம்... சங்கமம்
கதையில், மேடை பாடல் என்றாலும் மிதந்துவரும் தபேலாவும் லேசான ஹம்மிங்கும் ’பஞ்சுவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும்/ அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு’- இழுக்கும் வார்த்தைகளும் இந்த பாடலின் பிளஸ்!

6. உப்புக் கருவாடு ஊறவச்ச சோறு... முதல்வன்

’காத்து மட்டும் நுழையற காட்டுக்குள்ள/தூக்கணாங் குருவி கூட்டுக்குள்ள ஒருநாள் என்னை குடியிருக்க வை வை வை’’ என்று ரகுமானின் இழுக்கும் துள்ளலிசை, ஈர்க்கிறது இப்போதும்!

7. குறுக்கு சிறுத்தவளே... முதல்வன்

பாடல் முழுவதும் வரும் தபேலாவும் உள்ளே அவ்வப்போது வளைந்து நெளியும் புல்லாங்குழலும் ’கொடிய விட்டு குதிச்ச மல்லிகையே, ஒரு நொடி சிரிச்சு பேசடியே’ என்று தவிக்கிற குரலுமாக இந்தப் பாடல், ஆயிரம் பாட்டில் போதை!

8. உசுரே போகுதே போகுதே... ராவணன்

கொட்டும் அருவியும் அதில் குதிக்கும் விக்ரமும் ஐஸ்வர்யா ராயின் அழகும், கார்த்திக்கின் குரலும் ‘எங்கட்டையும் ஒரு நாள் சாயலாம், என் கண்ணுல உன் முகம் போகுமா?’ -தெறிக்கும் வார்த்தைகளும் தூக்கி நிறுத்துகிறது, இப்பாடலை!

9. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன? மரியான்

அசத்தலான காதல் மெலடி. எப்போது கேட்டாலும் மனதை கட்டிப்போட்டு, ஃபீல் பண்ண வைக்கும் பாடல். ரஹ்மான் ஸ்பெஷலில் இந்த பாடலுக்கு எப்போதும் உண்டு முதலிடம்! தனுஷ்- பார்வதியின் அந்த அபார நடிப்பும் விஷூவலும் பாடலுக்கு இன்னும் உயிர்
சேர்க்கிறது. 

10. ஹேய் மிஸ்டர் மைனர் என்ன பார்க்குற... (ஹரிச்சரண், ஷாஷா திருபாதி)

ரகுமானின் அடுத்த மாஸ்டர் கிளாஸ், மெலடி. பழமை ஸ்டைல் இசையும் ஷாஷா, ஹரிச்சரணின் குரல்களும் இந்த பாடலை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது.


Advertisement

Advertisement
[X] Close