[X] Close

வர்றாரு கோலி, பெங்களூர் ஜாலி!

Virat-Kohli-Returns-for-Royal-Challengers-Bangalore

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி முழு உடற்தகுதியுடன் உள்ளதாக அந்த அணியின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது‌. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் மும்பை அணியுடனான போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராத் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் ஐபிஎல் தொடரில் நடந்த மூன்று ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாக, மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை நடக்கும் மும்பையுடனான போட்டியில் கோலி ஆக்ரோஷமாகக் களமிறங்குகிறார். இதன் காரணமாக அவரது பெங்களூர் அணி தெம்பாக உள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close