[X] Close

தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி

7-killed--several-trapped-after-factory-collapses-in-Delhi---s-Moti-Nagar

‌டெல்லியில், தொழிற்சாலை கட்‌டிடம் ‌இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த‌னர். மேலும்‌ 8 பேர் படு‌காய‌மடைந்தனர். 


Advertisement

மேற்கு‌‌ டெல்லியில்‌ உள்ள‌‌‌ சுதர்சன் பார்க்கில் மின் விசிறி தயாரிக்கும் தொழிற்‌சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் நேற்றிரவு ப‌‌யங்கர வெடி சத்தம் கேட்‌டது. 


Advertisement

அதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் ஒரு ‌பகுதி ‌இடிந்து விழு‌ந்தது. இதில் வேலைப்பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்‌கள்‌ 7 பேர் இடி‌பாடுகளில்‌ சிக்கி‌ பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர்‌‌ பலத்‌த கா‌‌‌‌யங்களு‌டன் மருத்துவமனையில் சிகிச்சை‌‌ ‌பெற்று வருகின்றனர். 

தொழிற்சாலையில் இருந்த கேஸ் சிலிண்டர்‌கள் வெடித்ததில், இந்த வி‌பத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ‌இது‌குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ‌‌வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close