5 முறை தமிழக முதல்வராக இருந்த பெருமைக்குரிய கருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்.
தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பேசிய போது, “இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. 13 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றியவர், 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் ஆனார். எழுத்து,இலக்கியம்,திரைத்துறை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர், பன்முக தன்மை கொண்டவர். கருணாநிதியின் பன்முகத்தன்மையால் சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலமாக ஏற்படுத்தியவர். பராசக்தி படம் மூலம் தன்னை பகுத்தறிவாளர் என்பதை உலகிற்கு உணர்த்தினார். தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய தொண்டு மகத்தானது. ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரிய கருணாநிதி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை அளித்தவர். சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த கருணாநிதியை அதிமுகவும் சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது, தேவையெனில் எதிர்த்து உள்ளது. தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று கலைஞர் மு.கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் புகழாரம் சூட்டினார்.மேலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதி என்று அழைக்காமல், அவர் பெயர் வரும் இடத்தில் எல்லாம் திரு.கலைஞர் அவர்கள் என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!