[X] Close

“கருணாநிதி அழகுத் தமிழுக்கு மயங்காதவர் இல்லை” - ஓ.பன்னீர்செல்வம்

Deputy-CM-O-Pannir-Selvam-Speech-about-M-Karunanidhi-in-Assembly

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் திருவாரூரின் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


Advertisement

தீர்மானத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து பேசினார். அப்போது, “தான் சார்ந்த நாட்டுக்கு வாழ்ந்த மிகப்பெரிய தலைவர் கருணாநிதி. பன்முகக் தன்மை, தன்னம்பிக்கை கொண்டவர் கருணாநிதி. ராமானுஜம் தொடரை எழுதியவர். உடன்பிறப்புகளே என்ற தலைப்பில் 7 ஆயிரத்திற்கும் மேல் கடிதங்கள் எழுதியவர். அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி. அரசியல் எல்லையை கடந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருமே கருணாநிதி மீது அன்பு கொண்டிருந்தனர். 

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்த பெருமை கருணாதிக்கு உண்டு. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர். சமூக நீதிக்காக போராடியவர். தமிழ் மொழி மீது பற்று கொண்டவர். பத்திரிகை, இலக்கியம், கவிதை அன அனைத்திலும் சிறப்பான பங்காற்றியவர். சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதில் அளிக்கும் திறன் படைத்தவர்” என புகழாரம் சூடினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close