பைரவா திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் விவரத்தையும் புகாருக்கான எண்களையும் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் பைரவா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான தொலைபேசி எண்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, பைரவா படத்தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர்கள் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜா உத்தரவிட்டார். கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நாளை மறுதினத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்