“பகலில் பெண்களை அழைத்துவர துணிச்சல் இல்லை” - ஐயப்ப சேவா சங்கத் தலைவர் சாடல்

“பகலில் பெண்களை அழைத்துவர துணிச்சல் இல்லை” - ஐயப்ப சேவா சங்கத் தலைவர் சாடல்
“பகலில் பெண்களை அழைத்துவர துணிச்சல் இல்லை” - ஐயப்ப சேவா சங்கத் தலைவர் சாடல்

பகலில் பெண்களை அழைத்துவர துணிச்சல் இல்லை என்று கேரள அரசு மீது ஐயப்ப சேவா சங்கத் தலைவர் ராகுல் ஈஸ்வர் விமர்சித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவடைந்து மகர பூஜைக்காக நடை டிசம்பர் 30-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு குறைவான இரண்டு பெண்கள், அதிகாலை 3.45 மணியளவில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். அதிகாலையில் கோயிலுக்குச் சென்றதால் போராட்டக்காரர்கள் பார்வையில் படவில்லை என்று கூறப்படுகிறது. 

கனகா, துர்கா ஆகிய இரண்டு பெண்கள், சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தது உண்மைதான் என்பதை என கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்தார். அத்துடன் காவல்துறையினரின் முழு பாதுகாப்புடன் இந்தத் தரிசனத்தை பெண்கள் செய்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பகலில் பெண்களை அழைத்துவர துணிச்சல் இல்லை என்று கேரள அரசு மீது ஐயப்ப சேவா சங்கத் தலைவர் ராகுல் ஈஸ்வர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து நியூஸ் மினிட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், “இது கேரள அரசு செய்யும் நாடகம். பகலில் பெண்களை அழைத்து வர அவர்களுக்கு தைரியமில்லை. 

கோயிலுக்குள் பாரம்பரிய சடங்குகள் ஏதேனும் மீறப்பட்டால், அதற்கான பரிகார பூசைகள் செய்யப்படும். கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். பிரதமர் மோடியும் சமரிமலையில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருந்தார்.

இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கிறோம். பெண்களை அனுமதிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவாக இருப்பது துரதிருஷ்டவசமானது” என்று கூறினார்.

கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “கோயிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்துள்ளது பக்தர்களின் மனதினை புண்படுத்தியுள்ளது. பாரம்பரிய தடைகளை மீறி 50 வயதுக்கு குறைவான பெண்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளது முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கணத்தை காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com