Published : 13,Apr 2017 01:45 AM

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 2-வது வெற்றி

ipl-cricket--mumbai-indians-won

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி இரண்டாவது வெற்றியை ஈட்டியது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை ருசித்தது.

டாஸ் வென்ற மும்பை அணிக் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் மோசஸ் ஹென்ரிகஸ்-சுக்கு பதிலாக முஸ்தாஃபிசுர் ரஹ்மானும், பிபுல் ஷர்மாவுக்கு பதிலாக அறிமுக வீரராக தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கரும் களமிறக்கப்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. கேப்டன் வார்னர் 49 ரன்களும், ஷிகர் தவான் 48 ரன்களும் எடுத்தனர். பென் கட்டிங் 20 ரன்கள் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பார்தீவ் படேல், நிதிஷ் ரானா, குருணல் பாண்ட்யா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி, 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. பார்தீவ் படேல் 24 பந்துகளில் 39 ரன்களும், குருணல் பாண்ட்யா 20 பந்துகளில் 37 ரன்களும் விளாசினர். நிதிஷ் ராணா 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்