Published : 12,Apr 2017 04:36 PM
இனி திமுகவுக்கே வெற்றி: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இனி எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில் திமுகவே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தால் ஒரு தொகுதியில் தேர்தலை நடத்த முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். திமுகவின் வெற்றிக் கூட்டம் நடக்க வேண்டிய இடத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.