[X] Close

திருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞர்கள்... பெட்ரோல் தீர்ந்ததால் வசமாக சிக்கினர்..!

Robbery-man-arrested-in-Uttar-Pradesh

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரிடம் பணத்தை திருடி விட்டு தப்பியோட முயற்சித்த இளைஞர்களின் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததால், சிக்கிக் கொண்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹ‌‌த்ராஸ் பகுதியில் பள்ளி ஆசிரியை ஒருவர் ஆட்டோவில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள் அவரிடமிருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். இதனிடையே இளைஞர்கள் சென்ற வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் பெட்ரோல் நிலையத்தில் அவர்கள் நின்றிருந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்த சக ஆசிரியர்கள் பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர்களை பிடித்த சரமாரியாக தாக்கினர்.


Advertisement

தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞர்களை அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் விரட்டிப் பிடித்த சக ஆசிரியர்கள் அவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் பெட்ரோல் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close