[X] Close

2019ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? - நிகழ்வுகளும்.. எண்ணங்களும்..

2019-New-year-Turn---What-is-Public-expectation--

2019ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் கடந்த ஆண்டின் நிகழ்வுகளை நினைபடுத்திக்கொண்டும், பிறந்த ஆண்டில் நடக்கவுள்ள நிகழ்வுகளை சிந்தித்துக்கொண்டும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

2018ஆம் ஆண்டு பல்வேறு சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளுடன் கடந்து சென்றுவிட்டது. இன்று 2019 என்ற புதிய ஆண்டு பிறந்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக உலக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

அத்துடன் இந்த 2019ஆம் ஆண்டு என்னென்ன நிகழ்வுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்று எண்ணங்களும் மக்கள் மத்தியில் சென்றுகொண்டிருப்பதை, சமூக வலைத்தளங்களின் எதிரொலியால் காண முடிகிறது. குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று தமிழகத்திலும், நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்கள் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதவிர அரசியலில் புதிய கட்சிகளின் களம் உள்ளிட்ட பல புதிய அனுபவங்களும் ஏற்படவுள்ளன.

விளையாட்டு துறையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா கோப்பையை வெல்லுமா என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தோனி இந்த உலகக் கோப்பையுடன் விடைபெறவுள்ளதால், அவரது ரசிகர்கள் மத்தியில் அது வருத்தம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். இதேபோன்று ஹாக்கி, கால்பந்து உள்ளிட மற்ற விளையாட்டுகள் பலவும் நடைபெறவுள்ளன.


Advertisement

சினிமாவை பொறுத்தவரையில் ஆண்டின் தொடக்கத்தில் வரும் பொங்கலையொட்டியே,  தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ஆகியோரின் படங்கள் வெளிவருகின்றன. இது தமிழ்த்திரையுலகில் குறிப்பிடத் தகுந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்தும் பல திரைப்படங்கள் வெளியாகும். 

தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரையில் 5ஜி டெக்னாலாஜி இந்த ஆண்டில் வெளியாகும் என முன்னதாகவே தகவல்கள் கசிந்திருந்தன. அதேபோன்று செல்போன்கள், செயலிகள், நவீன கருவிகள் என அதிலும் பல புதியவை பிறக்கவுள்ளன. இதுவெல்லாம் எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தாலும், சில எதிர்மறை எண்ணங்களும் எழத்தான் செய்துள்ளன. 

குறிப்பாக என்னென்ன புதிய நோய்கள் உண்டாகுமோ, எத்தனை புயல்கள் வரப்போகிறதோ, விலைவாசி என்னவாகுமோ, வெள்ளம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற வருத்தமளிக்கும் எண்ணங்களும் இருக்கின்றன. இருப்பினும் அனைத்தையும் எதிர்கொள்ளும் ஒரு மன வலிமையுடன் இந்தப் புதிய ஆண்டை கொண்டாட்டத்துடன் மக்கள் வரவேற்றுள்ளனர். இதுதவிர 2019ஆம் ஆண்டில் விடிவு பிறக்குமோ என்ற எண்ணத்திலும் பல சாமானியர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு ராஜூவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், இந்த ஆண்டில் விடுதலையாவார் என எதிர்பார்த்து காத்திருப்பதாக அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்திருப்பது.
 


Advertisement

Advertisement
[X] Close