நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இது இல்லாமல் முடியாது என்கிற அளவுக்கு பலர் இதற்கு அடிமையாகியும் உள்ளனர். இந்த பேஸ்புக்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது.
இந்நிலையில் நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டோலுனா (TOLUNA) என்ற நிறுவனம் ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் 40 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக்கைத் தொடர்ந்து ட்விட்டர், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளன.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!