[X] Close

திருடர்களை அரிவாளுடன் துரத்திய வீரப்பெண் !

A-women-has-Chasing-the--Thieves-with-scythe-in-Kovai

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் ஸ்ரீனிவாச பிரபு-கவிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஸ்ரீனிவாச பிரபு தனியார் கம்பெனியில் மெடிக்கல் ரெப்பாகவும், அவரது மனைவி தனியார் கம்பெனியில் பணி செய்து வருகின்றனர். வழக்கம் போல காலை 9 மணிக்கு இருவரும் வேலைக்கு சென்று மாலை வேலை முடிந்தவுடன் அங்கிருந்தபடியே அவர்கள் சொந்த ஊரான தாராபுரம் தளவாய்பட்டினம் சென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட திருடர்கள் இருவர் இன்று அதிகாலை 1 மணியளவில் டூவிலரில் வந்துள்ளதாக தெரிகிறது. பின் வீட்டின் முன்பக்க கதவின் தாழ்பாளை உடைத்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர். 


இந்நிலையில் ஸ்ரீனிவாச பிரபு வீட்டின் அருகில் வசிக்கும் மலர்விழி என்பவர் இரவில் நாய் சத்தம் போடுவதால் யானைகள் வந்திருக்குமோ என்ற பயத்தில் தனது வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவை பார்த்துள்ளார். அதில் ஸ்ரீனிவாச பிரபு வீட்டின் சன்னலை தட்டிவிட்டு ஒருவர் செல்வதை பார்த்த அவருக்கு சந்தேகம் வரவே உடனடியாக கவிதாவிற்கு செல்போனில் அழைத்து கேட்டுள்ளார். அவர்கள் வீட்டில் இல்லை என்றும் என்னவென்று பார்க்க சொன்னதை தொடர்ந்து மலர்விழி, அவரது கணவர் மற்றும் அருகிலுள்ள ஹரிஸ் என்பவரையும் அழைத்து கொண்டு அருவாளுடன் ஸ்ரீனிவாச பிரபு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ளே சத்தம் கேட்கவே இவர்கள் திருடன் திருடன் என்று சத்தம்போட்டுள்ளனர். 


Advertisement

அப்போது வீட்டினுள் இருந்து 2பேரும் வெளியே ஓடிவந்து மீண்டும் வீட்டின் பின் வழியாக கம்பவுண்ட் சுவரை தாண்டி ஓடியுள்ளனர். உடனே இவர்களும் அவர்களை துரத்த அதற்குள் திருடர்கள் அங்கிருந்து சோளக்கட்டு வழியாக தப்பிவிட்டனர். இதனை தொடர்ந்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளை அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. அவைகள் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள நகைகள் ஆகும். 

மேலும் திருடர்கள் நிறுத்தி வைத்திருந்த டூவிலரை சோதனை செய்தபோது டூவிலரில் ஒரு பையில் நகைகள் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை போலிசார் எடுத்துக்கொண்டு ஸ்ரீனிவாச பிரபு கொடுத்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த வீட்டில் திருடர்கள் உள்ளே வருவதும், துரத்தும்போது தப்பி ஓடுவதும் மலர்வீழி வீட்டின் சி.சி.டி.வி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனையும் வைத்து போலீசார் தீவர விசாரணை செய்து வருகின்றனர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close