Published : 31,Dec 2018 08:04 AM

“புதிய எழுச்சியை வழங்கட்டும்” - முதலமைச்சர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

Tamil-Nadu-CM-Edappadi-Palanisamy-s-New-Year-Wishes

புதிய எழுச்சியையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக 2019 மலரட்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

2018ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை 2019 என்ற புதிய ஆண்டு பிறக்கிறது. இதனை வரவேற்கும் விதமாக உலக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றனர். 2018 மறக்க முடியாத சம்பவங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உலகில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், 2019ஆம் ஆண்டில் வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்போம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இணைந்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், புத்தாண்டு ‌புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மல

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்