Published : 30,Dec 2018 07:51 AM
எனக்கு பசிக்கும்ல, சாப்பிடக்கூடாதா? - வருடக்கடைசியில் வைரலான சிறுவன்

இணைய உலகத்தை பொறுத்தவரையில் ஒரே நாளில் யார் வேண்டுமானாலும் பிரபலமாகி விடலாம் என்ற நிலை உள்ளது. நேர்மறையோ, எதிர்மறையோ எத்தனையோ ஆட்களை இணைய உலகம் வெளி உலகுக்கு அடையாளம் காட்டுகிறது. வீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள், பொழுதுபோக்குக்காக செய்யப்படும் ‘டிக் டாக்’ வீடியோக்கள் என இணையத்தில் எப்போது எதுவெல்லாம் புகழடையும் என்று சொல்வதற்கில்லை.
அதிலும் குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள் சர்ரென்று வைரலாகி விடுகிறது. 'அடிக்காம திட்டாம குணமா வாய்ல சொல்லனும்', 'அப்போ நான் பாசம் இல்லையா', 'பொய்யு பொய்யு எல்லாம் பொய்யு' இது மாதிரி ட்ரெண்டிங் குழந்தைகளின் வசனங்கள் 2018ல் டாப் இடங்களை பிடித்தன. வருடத்தின் கடைசி கட்டத்தில் க்யூட் வசனங்கள் ரேஸில் இடம்பிடித்துள்ளார் இன்னொரு குழந்தை.
ஒரு சிறுவனிடம் உறவினர் விளையாட்டாக பேசுகிறார். ''உன்னை சங்கத்தில் சேர்த்துவிட்னே. அப்பாவிடம் பணத்தை வாங்கி வா'' என்றதும், அந்த சிறுவன் செல்கிறான். ''எப்போது வருவாய்'' என்று உறவினர் கேட்க ''சாப்பாடு தான் முக்கியம் நான் சாப்பிட்டுட்டு தான் வருவேன்'' என்று அந்த சிறுவன் கியூட்டாக பதில் சொல்கிறான். அவர் மீண்டும் அதட்டி கேட்க ''எனக்கு பசிக்கும்ல நான் சாப்பிடக்கூடாதா'' என்று அழத்தொடங்குகிறான் சிறுவன். நேற்று முதல் இந்த சிறுவனின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.