Published : 30,Dec 2018 02:50 AM
பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் முயற்சித்த முஷரப் ! வீடியோ மூலம் அம்பலம்

பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு, அமெரிக்காவின் ரகசிய உதவியை பர்வேஸ் முஷரப் நாடியது வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தானில் 2001 முதல் 2008ஆம் ஆண்டு வரை அதிபராக முஷரப் பதவி வகித்து வந்தார். தன் மீதான பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதைத் தவிர்க்கும் விதத்தில், 2008ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மீண்டும் அதிபராகி, ஆட்சி அதிகாரத்தில் அமர, அமெரிக்காவின் ரகசிய உதவியை நாடியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சில வீடியோ காட்சி தொகுப்புகளை பாகிஸ்தானைச் சேர்ந்த குல் புகாரி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நான் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அதற்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றும், அந்த ஆதரவு வெளிப்படையாக அல்ல, ரகசியமாக என் கூறும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
3/7 pic.twitter.com/LMs9zkuOfm
— Gul Bukhari (@GulBukhari) December 28, 2018
அமெரிக்க தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு, பாகிஸ்தான் உடந்தையாக இல்லை என்றும் அமெரிக்க எம்.பி.க்களிடம், பர்வேஸ் முஷரப் உரையாடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.