நேர்மை, அர்ப்பணிப்பு மனப்பான்மை இல்லாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மண்ணடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த கட்டடத்தின் உரிமையாளர் மெஹ்ரஜ் பேகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளும், விதிமீறல் கட்டடங்களும் புற்று
நோய் போல் பரவி வருவதாக வேதனை தெரிவித்தனர்.
விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் பாதுகாக்காது என்றும் மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இதுபோன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், நேர்மை, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றாத அதிகாரிகள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
மாநகராட்சி அதிகாரிகள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை, அவர்களின் சொத்து விவரங்களை அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்