Published : 29,Dec 2018 06:51 AM

4 வயது சிறுமி கடத்தப்பட்டு மீட்பு !

Child-Kidnapped-in-Chennai

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு செல்வி என்ற பெண்ணுடன் திருமணாமாகி 4 வயதில் ஜெயலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் செல்வி தனது தாய்வீடு உள்ள கொத்தவால்சாவடியில் மகளை விட்டுச் சென்றுள்ளார். அங்கு சாலையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஜெயலட்சுமி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக கொத்தவால்சாவடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறை விசாரணை செய்தனர். அப்போது அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுமியை பெண் ஒருவர் கையை பிடித்து அழைத்துச்சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தியவரை தேடும் பணிகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

Related image

இந்நிலையில் கடத்தப்பட்டட 4 வயது சிறுமியை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிறுமியை கடத்தியது குறித்து கடத்தப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை அழைத்துச்சென்ற பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்