அறநிலையத்துறை ஆணையர் அதிரடி மாற்றம் !

அறநிலையத்துறை ஆணையர் அதிரடி மாற்றம் !
அறநிலையத்துறை ஆணையர் அதிரடி மாற்றம் !

இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த டி.கே.ராமச்சந்திரனை மாற்றம் செய்து புதிய ஆணையராக பணீந்திர ரெட்டியை தமிழக அரசு நியமித்துள்ளது. 

கடந்த 2017 ஜூலை மாதம் 1 ஆம் தேதி சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டது. மேலும், கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட 20 உத்தரவுகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்தது. ஆனால் பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. மேலும் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி டிராபிக் ராமசாமியும் மற்றும் யானை ராஜேந்திரனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினம் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில், மேலும் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரே நீடிப்பார் என்றும் புதிய ஆணை பிறப்பித்தது. இந்த சுழலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த 13 பேர் பொன்.மாணிக்கவேல் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில்  இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை தமிழக அரசு மாற்ற உத்தரவு பிறபித்தது. அதன்படி அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயலாளராக பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே ‌ஆணையராக இருந்த டி.கே.ராமச்சந்திரன், தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தலைவராக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்ததுள்ளது. அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட பணீந்திர ரெட்டி அண்ணா மேலாண்மை கல்வி
நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்த்க்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com