“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி

“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி
“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி

நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் கிரிக்கெட்டில் கடந்து வந்த 50 ஆண்டுகள் பயணத்தை ‘காபி டேபிள் புக்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டில் பல்வேறு முன்னணி மாற்றங்களை கொண்டு வந்ததில் சீனிவாசனுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தப் புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி பெற்றுக்கொண்டார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய தோனி, சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடிந்தது எனவும் என் ஆக்ரோஷத்தை நிதானப்படுத்தி, பலமான, நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்படுத்தியது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com