[X] Close

சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

Sexual-Harassment-to-Child--10-Years-Jail-for-Former-MLA

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Read Also -> ‘கிளி’ யாருக்குச் சொந்தம்..? காவல் நிலையம் சென்றது வழக்கு..!


Advertisement

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாரின் நண்பர்கள் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read Also -> “மாங்காடு பெண்ணுக்கு கொடுத்த ரத்தத்தில் எச்.ஐ.வி இல்லை” - கே.எம்.சி. டீன் 


Advertisement

ராஜ்குமார் முன்னாள் எம்எல்ஏ என்பதால் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டிருந்தது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close