[X] Close

தி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் கனிமொழி

Kanimozhi-is-The-Hindu-staff-union-president

தி இந்து ஆங்கில நாளிதழ் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக கனிமொழி எம்.பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்காக நடந்த தேர்தலில் மொத்தமுள்ள வாக்குகளில் 405 வாக்குகளைப் பெற்ற கனிமொழி தனக்கு அடுத்தபடியாக வந்த சாலமோனை விட 103 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இத்தொழிற்சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை கனிமொழி பெறுகிறார்.

தொழிற்சங்கத்தில் மொத்தம் உள்ள ஆறு பதவிகளில் ஐந்தை கனிமொழி அணியினர் கைப்பற்றியுள்ளனர். சங்கத்தின் துணைத்தலைவராக பாரதிதாசனும், துணைச் செயலாளராக மார்ட்டின் தாமஸூம், பொதுச்செயலாளராக கமலநாதனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்க உள்ளனர். 3 ஆண்டு காலம் இவர்கள் பதவியில் இருப்பார்கள். பழம்பெருமை வாய்ந்த தொழிற்சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close