[X] Close

சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக உயர்வு

Indonesia-tsunami--death-toll-rises-to-429

இந்தோனேஷியாவில் சுனாமியால் பலியானோர்களின் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே சுந்தா ஜலசந்தி உள்ளது. அங்கு அமைந்துள்ள அனக் கிரகட்டாவ் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் நில அடுக்கு நகர்வு ஏற்பட்டது.

 இதனால் ஏற்பட்ட சுனாமி அந்த நாட்டின் பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகளைக் கடுமையாகத் தாக்கின. 
ஜாவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டான்ஜங் லீசங் கடற்கரை உல்லாச விடுதி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங் கள் உருக்குலைந்தன.


Advertisement

சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின. 1.5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங் கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 281 பேர் உயிரிழந்தாகக் கூறப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பேரிடர் முகமை தகவல் தெரிவித்திருந்தது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.  இந்நிலை யில் உயிரிழந்தோர் எண்ணிக் கை 429 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement

பலர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 154 பேரை காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி நடந்துவருவதாகவும் தேசிய பேரிடம் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close