இந்தோனேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஆழிப்பேரலை புகுந்து மக்களை அடித்துச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதிகளாக உள்ள சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் திடீரென்று சுனாமி தாக்கியது. இங்கு கொந்தளித்துக் கொண்டிருந்த கிரகட்டாவ் எரிமலை வெடிக்கத் துவங்கியுதை அடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வர்த்தக கட்டடங்கள், ஓட்டல்கள் இடிந்துள்ளன. இந்த சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 281ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பேரிடம் முகமை தகவல் தெரிவித்துள்ளது. பல பேர் மாயமாகி உள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கடல் அலை புகும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தக்காட்சியில் சுனாமி பரபரப்பு இல்லாமல் உற்சாக மிகுதியாக இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. திடீரென இசை நிகழ்ச்சியின் மேடையை உடைத்துக்கொண்டு கடலலை அரங்குக்குள் புகுந்து செல்கிறது. சுனாமி குறித்து எந்த முன்னறிவிப்பும் இல்லாததே இது மாதிரியான சம்பவத்துக்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
#Update: SHOCKING VIDEO - Another longer video of the #Tsunami hitting the shores in #Indonesia and slamming into a "Band" playing in a tent near the shore when the waves hit. pic.twitter.com/tONpl4afyc— Sotiri Dimpinoudis (@sotiridi) December 23, 2018
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!