[X] Close

இந்தோனேஷியாவில் பயங்கரம்: சுனாமிக்கு 43 பேர் பலி, 582 பேர் படுகாயம்!

At-least-43-killed-when-tsunami-hits-beaches-in-Indonesia

இந்தோனேஷியாவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சுனாமியில் சுமார் 43 பேர் பலியானதாகவும் 582 பேர் படுகாயம் அடைந் துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதிகளாக உள்ள சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற் கரை பகுதிகளில் நேற்று திடீரென்று சுனாமி தாக்கியது. இங்கு கொந்தளித்துக் கொண்டிருந்த கிரகட்டாவ் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளதை அடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது. 


Advertisement

இதில் சிக்கி சுமார் சுமார் 20 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 43 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 582 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சுனாமியை அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளை இழந்தவர்கள் அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close