[X] Close

எனது பெயரில் புதிய தொலைக்காட்சி ஏன்? - ரஜினி விளக்கம்

why-television-channel-registered-in-my-name---actor-rajinikanth

தனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

2018 ஆம் ஆண்டில் ஒருபுறம் திரைப்பட பணியிலும், மறுபுறம் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணிகளிலும் ரஜினி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ‘காலா’,‘2.0’ ஆகிய இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியானது. முறையாக கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி தொடர்ச்சியாக அவர்களுடன் உரையாடி வந்தார். 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அமெரிக்காவில் சில வாரங்கள் தங்கி அவர் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.


Advertisement

     

ரஜினி பேசியதன் விவரம்:-

புத்தாண்டிற்கு உங்கள் வாழ்த்து?


Advertisement
  • புத்தாண்டில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக, செழிப்பாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

‘பேட்ட’ படம் எப்படி வந்திருக்கு? 

  • ‘பேட்ட’ திரைப்படம் நான் எதிர்பார்த்தது போல் வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.

உங்கள் பெயரில் தொலைக்காட்சி தொடங்கவுள்ளதா?

  • என்னுடைய பெயரில் தொலைக்காட்சி சேனல் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் வந்தது. அதனால், முன் கூட்டியே எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம். 

நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கூட்டணி? 

  • கட்சி ஆரம்பித்த பிறகே கூட்டணி பற்றி பேசலாம். 

Advertisement

Advertisement
[X] Close