கார் நெம்பர் பிளேட்டில் தோனி பெயர் - அசத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்

கார் நெம்பர் பிளேட்டில் தோனி பெயர் - அசத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்
கார் நெம்பர் பிளேட்டில் தோனி பெயர் - அசத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி பெயரை தனது காரின் நெம்பர் பிளேட்டில் எழுதியுள்ளார்.

37 வயதான தோனிக்கு இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பல்வேறு சாதனைகள் புரிந்தது போல், ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமையேற்று மூன்று கோப்பைகளை வென்று தந்துள்ளார். இதனால், சிஎஸ்கே கேப்டனாகவும் தோனிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

தோனியின் ரசிகர்கள் போட்டிகளின் போது அவரது பெயரை பெயிண்ட்டால் தங்களது உடலில் எழுதிக் கொண்டு அன்பை வெளிப்படுத்துவார்கள். அதிக அளவிலான ரசிகர்கள் அவர் பெயரினை கொண்ட 7 ஆம் எண் டிசர்ட்டை அணிவார்கள். 

அந்த வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரசிகர் ஒருவர் தன்னுடைய காரின் நெம்பர் பிளேட்டில் தோனியின் பெயரினை எழுதியுள்ளார். சென்னை அணியின் நிறமான மஞ்சளில் அந்தப் பெயர் எழுதப்பட்டுள்ளது.

தோனி பெயருடன் கூடிய காரின் படத்தினை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த ட்விட்டில், ‘ஆஹா.. பழமையான அந்தச் சொப்பன சுந்தரி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கு !” என்று பதிவிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com