
தமிழகத்தில் அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் பரப்புரையை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத இறுதியில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தேதி, பிரதமரின் பயணத்திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மக்களவை தேர்தல் பரப்புரை மற்றும் அது தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் வரும் பிரதமர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன் காணொலியில் நரேந்திர மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை பிரதமர் மோடி துவங்க உள்ளார். இந்த நிலையில் அடுத்த மாதம் இறுதியில் தமிழகம் வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் இளைஞர் அணி கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பாஜக நிர்வாகி கே.டி. ராகவன் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரவிருப்பதாக கூறியுள்ளார்.